'கடல்' படத்தை பத்திய விமர்சன போஸ்ட்டுன்னு நீங்க நினைச்சீங்கன்னா நான்
அதுக்கு வேற லின்க் குடுக்குறேன். இந்த போஸ்ட்ல எனக்கு 'கடல்' படம்
பார்த்து மனசுல பட்டதை மட்டுமே எழுதுறேன். இதை நான் ட்விட்லாங்கராவோ பேஸ்புக்ல
ஸ்டேட்டஸாவோ போடலாமுன்னு தான் முதல்ல நினைச்சேன். அப்புறம் தான் சரி
எதுக்கு இங்க சிவனேன்னு ஒன்ன ஓப்பன் பண்ணிவச்சிட்டிருக்கேன்? இந்த மாதிரி
டைம்ல யூஸ் பண்ணிக்கிட்டா தான் உண்டுன்னு இதுல போஸ்ட் பண்றேன்.
இன்றைக்கு
நான் இருந்த கடுப்புக்கு அலெக்ஸ் பாண்டியன் போட்டாக்கூட பேக் டூ பேக் ஷோஸ்
பார்த்திருப்பேன். அதனால 'கடல்' பாக்க போறப்போ ஏதோ திரைப்பட
திருவிழாவுக்கு போறமாதிரியே ஃபீல் பண்ணேன். எனவே உங்கள் விமர்சனங்களோ, மரண
மொக்கை போன்ற ட்வீட்கள்/ ஸ்டேட்டஸுகளோ எனக்கு துச்சமாகப்பட்டது. சாதா
நாளில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் பால்கனி டிக்கெட் இன்று 100 ரூபாய்,
சரியென்று பால்கணிக்கே டிக்கெட் எடுத்தேன். இது மணி சாருக்காக இல்ல, நிறைய
ஃபிகர்ஸ் அங்க தான் இருந்தாங்க.
படம் ம்ம்...ஓகே! எனக்கு நல்லாவேயிருந்தது. இண்டர்வல் வரைக்கும் “செம” ரீதி, அதுக்கப்புறம் ’ஓகே’விலிருந்து ‘சுமார்’. படத்தில எனக்கு பிடித்த விஷயம் ரகுமான், ராஜீவ் மேனன், அரவிந்த்சாமி. பிடிக்காத விஷயம் மணி-ஜெமோ காம்போ, அர்ஜூன் அல்லது அவரது dull characterization. மணி மற்றும் ஜெமோ தனித்தனியே மிகவும் திறமைசாலிகள். ஆனால் ஜெமோ புத்தகத்தில் வார்த்தைகளால் எளிமையாக வடிவமைக்க முடிந்த/முடிகிற சில விசயங்களை படம் பார்க்கிறவர்களுக்கு எஃபெக்ட்டிவ்வாக கொண்டுச்சேர்க்க
சிறிது மெனக்கெட்டாலும் பல காட்சிகளில் தோல்விகளாகவே முடிந்தது. உதா:- இறுதிக்காட்சியில் அர்ஜூன் பேசும் தர்க்கங்கள், அடிக்கடி அர்ஜூன் “நான் சாத்தான்லே! சாத்தான்லே!” என்று கூறுவது ஒருகட்டத்திற்கு மேல் சிரிப்புமூட்டுவதாகவே ஆகிவிடுகிறது. அப்பாடா! ஒரே பத்தியில நான் முடிச்சிட்டதால் யாரும் இதை விமர்சனமுன்னு ஒத்துக்கமாட்டாங்க.
எனக்கு மிகவும் பிடித்தக்காட்சியை நான் இங்கே பகிர்ந்துக்கப்போறேன். கவுதமாகிய தாமஸ் தன் காதலி பியாவிடம் கூறுவாரே,
“பாவம்ன்னா என்னா தெரியுமா? ஒருத்தன கல்லைக்கட்டி அப்படியே கடல்ல தூக்கிப்போடுறது! அதான் பாவம்!, துப்பாக்கிய வச்சு அப்படியே மண்டையில சுட்டுத்தள்ளுறது! அதான் பாவம்! அருவாளால ஒருத்தன் தலைய அப்படியே சீவுறது! அது பாவம்! இது பல பாவங்களை பண்ணுன கை!” உடனே பியா சொல்லுவாள், “சரி சரி! இனிமே அப்படி பண்ணாத சரியா? நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்! உன்ன மன்னிச்சுட்டேன்”. உடனே அக்காட்சிகளில் இசைக்கருவிகள் நிறுத்தப்படும். ஒருவித அமைதிப்பரவும் தாமஸுக்கும் நமக்கும் தான். “பாவமன்னிப்பு, இரட்சிப்பு” போன்ற வார்த்தைகள் திருவிவிலியத்தின் கோட்பாடுகள். அதை நமக்கு உணர்த்த பல அதிகாரங்கள், வசனங்கள், சத்தியங்கள், உவமைகள் என்றிருந்தாலும் இக்காட்சி “ஜஸ்ட் லைக் தட்”டாக விளக்கிச்சென்றுவிடுகிறது. மன்னிப்பு கேட்பவன் மட்டும் குழந்தையாக மாறக்கூடாது, மன்னிப்பு தருபவனும் குழந்தையாக மாறவேண்டும். இப்படத்தில் கதாநாயகிக்கு குழந்தையின் மூளையென்று ஏற்கனவே சொல்லிவிடுவதால் அக்காட்சிக்கு அது மேலும் வலுசேர்க்கின்றது.
எனவே குழந்தையாக மாறுவோம், அனைவரையும் மன்னிப்போம். இறுதியில் படத்தை மொக்கையாக கொண்டுச்சென்ற மணிரத்னம்- ஜெமோ கூட்டணியையும் சேர்த்து!